Saturday 6 January 2018

சூரியலோகம் செல்வோமா

Image result for சூரிய பகவான்

கிருஷ்ணரின் மகனான சாம்பன், தன் சாபம் தீர நாரதரின் உதவியை நாடினான். நாரதர் சூரியனை வழிபட்டால் சாபவிமோசனம் உண்டாகும் என தெரிவித்தார். அப்போது நாரதர், சூரியனின் வரலாற்றை அவனுக்கு எடுத்துக் கூறினார். அதுவே சூரிய புராணம் ஆயிற்று. 

யட்சர்கள், ராட்சஷர்கள், நாகர்கள் ஆயுதம் ஏந்தி சூரிய லோகத்தை காவல் செய்கின்றனர். கந்தர்வர்கள் கானம் இசைக்க, அதற்கேற்ப அப்சரஸ் தேவதைகள் நடனம் ஆடுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களால் மகரிஷிகள் சூரியனைப் போற்றுவர். காலை, மதியம், மாலையில், ஆதித்தியர், வசுக்கள், ருத்திரர்கள், மருத்துகள், அஸ்வினி தேவர்கள் என்ற தேவலோகப் பிரிவினர் ஒன்று கூடி சூரியனை வழிபடுவர். அருணன் சாரதியாக இருக்க, ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேரில் சூரியன் வலம் வருவார். 

No comments:

Post a Comment