"பித்தா பிறைசூடி....' என்ற தேவாரப்பாடலில் சுந்தரர் சிவனை "பித்தன்' என்று குறிப்பிடுகிறார். பித்தன் என்றால் "பைத்தியக்காரன்' என்று பொருள். அடியவர்களுக்கு எப்படி அருள்புரிவது என்று சிந்தித்தே சிந்தித்தே அவர் பித்தாகி விட்டார் என்பதால் இப்படி பாடினாராம்.
மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இதற்கான காரணத்தை வித்தியாசமாக விளக்குகிறார். "கங்கை (நீர்) தன்னுள் மூழ்கியவனுக்கு மூன்று முறை மட்டும் உயிர் பிச்சை அளிக்கும். ஆனால், உயிர்களாகிய பிள்ளைகள் செய்யும் அத்தனை பிழையையும் மன்னிப்பவளாக அம்பிகை இருக்கிறாள். தாட்சண்யம் நிறைந்த அவளின் கண்களைக் கருதி மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்றெல்லாம் அவளுக்கு பெயர் இருக்கிறது. இவர்களெல்லாம் கண்களாலேயே பக்தர்களுக்கு கருணை பொழிகிறவர்கள்.
கருணை மிக்க அம்பிகையைத் தலையில் வைத்துக் கொள்வதே நியாயம். ஆனால், சிவன் கங்கைக்கு முதலிடம் அளித்து அவளைத் தலையிலும், அம்பிகைக்கு உடம்பில் இடப்பாகத்தையும் கொடுத்திருக்கிறார். நியாயமற்ற இந்தச் செயல் அவர் பித்தர் என்பதைக் காட்டுகிறது'' என்கிறார்.
No comments:
Post a Comment