Saturday, 20 January 2018

கோபத்துடன் கொடுத்தாலும் அல்வா இனிக்கத்தான் செய்யும்


கஜேந்திரன் என்னும் யானை குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கியது. அங்கிருந்த முதலை அதன் காலைக் கவ்விக் கொண்டது. இரண்டும் சண்டை போட ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் தன் இயலாமையை உணர்ந்த கஜேந்திரன், "ஆதிமூலமே' என அழைத்தது. பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி சக்கராயுதத்தை ஏவி விட உயிர் பிழைத்தது. சாபத்தால் முதலை வடிவில் இருந்த கந்தர்வனும் சுயவடிவம் பெற்று திருமாலை வணங்கினான். இந்த கஜேந்திர மோட்ச வரலாறு அனைவரும் அறிந்தது என்றாலும், அதிலுள்ள நுட்பத்தை புலவர் ஒருவர் வேடிக்கையாக விளக்குகிறார். யானை, "ஆதிமூலம்' என்று திருமாலை அழைக்கவில்லை. காலைப் பிடித்து இழுப்பது "முதலை' என்பதை அறிந்து பயத்தில்,"முதலே! முதலே!' என்று தான் கத்தியதாம். "முழு முதல்' கடவுளான திருமால், யானை தன்னையே அழைப்பதாக எண்ணி கருடனில் புறப்பட்டு வந்தார் என்கிறார் புலவர். கோபத்தில் கொடுத்தாலும் அல்வா இனிக்கத்தான் செய்யும். அதுபோல, அறியாமல் கடவுளின் திருநாமங்களை சொன்னாலும், நமக்கு அவரது அருள் கிடைக்கும என்ற உண்மையை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

No comments:

Post a Comment