Thursday 18 January 2018

காட்டுக்குள் கோயில் அல்ல! காடே கோயில்!


ஊருக்குள்ளும், காட்டுக்குள்ளும் இருக்கும் பல கோவில்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், காட்டையே கோவிலாக வணங்குகிறார்கள் மேற்கு வங்காள மாநிலத்தில்...இந்தக்கோவில் திருமாலின் திவ்யதேசங்களில் ஒன்றான நைமிசாரண்யம் ஆகும்.

ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி, 12 ஆண்டுகள் தொடர்ந்து சத்தியவேள்வி செய்ய விரும்பினர். இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்காக நடத்தப்படும் யாகம் இது. அதற்குரிய இடத்தை தேர்வு செய்து தரும்படி பிரம்மனை வேண்டினர். ஒரு தர்ப்பைப் புல்லை சக்கரம் போல் வளைத்து, அந்த வளையத்தை உருட்டி விட்டார் பிரம்மா. அது எங்கு போய் நிற்கிறதோ அங்கே யாகம் செய்யுங்கள் என அருளினார். அந்த சக்கரம் அலக்நந்தா நதிக்கரையில் நின்றது. அங்கு முனிவர்கள் வேள்வியைச் செய்தனர்.

"நேமி' என்றால் "சக்கரம்' அல்லது "வளையம்' என்று பொருள். "ஆரண்யம்' என்றால் காடு. சக்கரம் நின்ற ஆரண்யம் என்பதால் "நேமிச ஆரண்யம்' என அவ்விடத்திற்கு பெயர் ஏற்பட்டது. பின்னாளில், அது மருவி "நைமிசாரண்யம்' ஆனது. இத்தலம் கோல்கட்டாவில் இருந்து டேராடூன் செல்லும் வழியில் உள்ளது.

No comments:

Post a Comment