
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். முதலில் வந்த விஷத்தை சிவபெருமான் அருந்தி தேவர்களைக் காப்பாற்றினார். அதனால் அவருக்கு "நீலகண்டர்' என்ற பெயர் ஏற்பட்டது. பாற்கடலைத் தொடர்ந்து கடைந்தபோது காமதேனுவும், உச்சைசிரவஸ் என்ற தங்க நிற குதிரையும், ஐராவதம் என்ற யானையும், கற்பகம், அரிச்சந்தம், சந்தனம், மந்தாரம், பாரிஜாதம் என்னும் ஐந்து மரங்களும் வெளி வந்தன. இந்த ஐந்து மரங்களையும் "பஞ்ச தருக்கள்' என்பர். இதில் கற்பகமரம் கேட்டதை எல்லாம் கொடுக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
No comments:
Post a Comment