Friday, 5 January 2018

அச்சம் போக்கும் ஐந்து முகம்


ராவணனை வதம் செய்த செய்தியை அறிந்த சதகண்டன் என்னும் அரக்கன் ராமனோடு போர் புரிய வந்தான். ராவணவதம் முடித்த ராமன் களைப்பு தீர ஓய்வெடுக்கட்டும் என எண்ணிய ஆஞ்சநேயர், தனக்கே உரித்தான வானரம் மற்றும் சிங்கம், கருடன், வராகம்(பன்றி), குதிரை ஆகிய ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக மாறினார். சதகண்டன் எடுத்த மாய வடிவங்களுக்கு ஏற்ப தானும் உருமாறி அழித்தார். பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட நரசிம்மர், கருடன், வராகர், ஹயக்ரீவர், ஆஞ்சநேயர் ஆகிய ஐவரையும் வணங்கிய பலன் கிடைக்கும். பயம் நீங்கும்.

No comments:

Post a Comment