
"காளி கட்' எனப்படும் கோல்கட்டா தட்சிணேஸ்வரம் காளி கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள காளியை "பவதாரிணி' என்பர். இவள் மிகவும் உக்ரமானவளாக கருதப்படுகிறாள். சிவப்பு ஆடை உடுத்தி, கபால மாலை அணிந்து, செந்நிற நாக்கைத் தொங்க விட்டு காட்சி தரும் இவளை "ஹஜார் புஜ காளி' என்பர். "ஹஜார் புஜம்' என்றால் "ஆயிரம் கைகள்'. சிங்கத்தை வாகனமாகக் கொண்டவள். பவதாரிணி கோயில் அர்ச்சகராக இருந்த ராம கிருஷ்ண பரமஹம்சர் அம்பாளிடம் இயல்பாகப் பேசும் வழக்கம் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment