Friday 19 January 2018

விசேஷம்... இது வித்தியாசம்


* ஞானசக்தி தர சுவாமி, கந்தன், சேனாதிபதி, சுப்ரமணியர், கயவாகனர், சரவணபவர், கார்த்திகேயன், குமாரசுவாமி, சண்முகர், தாரகாரி, சேளானி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, வள்ளி கல்யாணசுந்தரர், கவுஞ்சமுக தள சுவாமி, மிஷிவாகன சுவாமி என முருகப்பெருமான் 16 வகை கோலங்களில் அருளுகிறார்.

* குருந்தமலை வேலாயுதசுவாமி கோவிலில் உள்ள முருகன் சிலை மீது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி சுவாமியின் பாதத்தில் தொடங்கி மார்பு வரை, சூரிய ஒளி படர்ந்து செல்கிறது.

* திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் தன் கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, ஒரு காலை மயிலின் மீது வைத்து நிற்கிறார்.

* திருச்சி அருகேயுள்ள விராலிமலையில், முருகனுக்கு நைவேத்தியமாக சுருட்டு படைக்கப்படுகிறது. 

* சுவாமிமலை முருகன் கோவிலில் 60 படிகள் உள்ளன. இவை பிரபவ முதல் அட்சய முடிய உள்ள 60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும். இந்த கருத்தைச் சொன்னவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. 

No comments:

Post a Comment