Friday, 19 January 2018

வெளிநாட்டவரின் தமிழ்க்கடவுள்


முருகனுக்கு "தமிழ்க்கடவுள்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. தமிழர்களுக்கு மட்டுமல்ல...இவர் மீது ஆங்கிலேயர்களுக்கும் அன்பு உண்டு. ஐரோப்பியப் பெண் ஒருவர் முருகன் மீது தீவிர பக்தி கொண்டார். அவர் 1936ல், கொடைக்கானலில் கட்டியதே குறிஞ்சியாண்டவர் கோவில். மலை மற்றும் மலை சார்ந்த இடத்தை "குறிஞ்சி நிலம்' என்பர். இது மலையில் அமைந்த கோவில் என்பதால் "குறிஞ்சி ஆண்டவர் கோவில்' என பெயர் பெற்றது. இந்து மதத்தின் மீது பற்று கொண்ட ஈடுபாட்டால், அந்தப் பெண் தன் பெயரை "லீலாவதி' என மாற்றிக் கொண்டதோடு, ராமநாதன் என்ற தமிழரையும் மணந்து கொண்டார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ இங்கு பூக்கிறது.

No comments:

Post a Comment