Sunday 8 October 2017

பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்தால் பிரச்னைகள் விலகும்


வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது?. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்து, வருவதையும் போவதையும் சாயியின் கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு, நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. பாபாவுடைய மஹத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நாம் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்? சமர்த்த சாயியே சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெலுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ, அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார்.

No comments:

Post a Comment