Wednesday, 18 October 2017

கடவுளிடம் எதையும் கேட்காதீங்க!


இறைவனிடம் பக்தன் எதையும் கேட்கக் கூடாது என்கிறது கருடபுராணம். இப்படி சொல்வது நமக்குப் புதுமையாக இருக்கும். நாம் விரும்பியதை எல்லாம் கேட்பதற்குத் தானே கடவுள் இருக்கிறார் என்று நினைக்கிறோம். ஒரு குழந்தைக்குத் தாய் பார்த்து பார்த்து பணிவிடை செய்வாள். தூங்கும் குழந்தையைக் கூட எழுப்பி, ""பாவம் பசியோடு குழந்தை தூங்குகிறதே!'' என்று பாலூட்டுவாள். அதே போல் தான் இறைவனும்! அவர் தாயன்போடு நம்மை காத்தருள்கிறார். இந்த நம்பிக்கை ஒருவனுக்கு ஆழமாக இருந்தால், "இதைக் கொடு' "அதைக் கொடு' என்று கேட்கத் தோன்றாது. பக்தனுக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் இறைவனைத் தவிர வேறொருவர் இல்லை. இதை உணர்ந்தவர்கள், ""இறைவா! உன் திருவடியில் நிரந்தரமான பக்தியை எனக்குக் கொடு!'' என்று மட்டும் கேட்பார்கள். அதையே எல்லாரும் கேட்க 

No comments:

Post a Comment