Friday 13 October 2017

கிணற்றுக்கு வந்த கங்கை


கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிசநல்லூரில், ஸ்ரீதர ஐயாவாள் என்னும் மகான் வாழ்ந்தார். ஒரு கார்த்திகை அமாவாசை நாளில், இவர் தன் தந்தையின் திதிக்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தார். 

அப்போது, ஒரு முதியவர், பசியோடு நிற்பதைக் கண்டு உணவிட்டபடியே, புரோகிதர் வரவுக்காக காத்திருந்தார். வந்த புரோகிதரோ மகானின் செயலைக் கண்டு திடுக்கிட்டார்.

""திதியன்று நாலாம் வர்ணத்தாருக்கு (அக்கால ஜாதியில் ஒரு பிரிவு) உணவிடுவது கூடாது. அதனால், கங்கையில் நீராடி வந்தால் தான், திதி கொடுக்க முடியும்,'' என்றார். கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள் அடுத்த ஆண்டு திதி வந்துவிடுமே என்று ஐயாவாள் வருந்தினார். உடனே "கங்காஷ்டகம்' என்னும் ஸ்தோத்திரத்தால் கங்காதேவியை வழிபட்டார். என்னே! அதிசயம்! வீட்டில் இருந்த கிணற்றில் கங்கைநீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக் காடானது. மகானின் பெருமையை அறிந்த மக்கள் அதிசயித்தனர். பெருக்கை குறைத்துக் கொண்டு அந்தக் கிணற்றிலேயே நிரந்தரமாக தங்கும்படி, கங்காதேவியை ஐயாவாள் கேட்டுக்கொண்டார். அதன்படி இக்கிணறு கங்கையின் புனிதத்தை அளித்து வருகிறது. 

இந்நிகழ்வு நடந்த கார்த்திகை அமாவாசையை ஒட்டி, திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் விழா நடக்கும். பஜனை, சொற்பொழிவு, கச்சேரி, அன்னதானம் இடம் பெறும். இவ்வாண்டு , நவம்பர் 24ல் கார்த்திகை அமாவாசையன்று பக்தர்கள் கங்காக்கிணற்றில் புனித நீராடுவர்.

No comments:

Post a Comment