Saturday 20 January 2018

இது என்ன மாயம்


மாயம் செய்வதில் வல்லவர் என்பதால் கிருஷ்ணரை "மாய கிருஷ்ணன்' என்பர். ஆனால், அந்த மாயனுக்கும் முந்தி மாயம் செய்தவர் வாமனர். குள்ளமாக வந்து குறுகிய கால்களால், மூன்றடி மண் தானம் கேட்ட அவர், திடீரென திரிவிக்கிரமனாக உயர்ந்து பெரிய திருவடிகளால் உலகை அளந்தார். இதனால், மாயன் என்ற சொல் இவருக்கும் உரியதானது. அவர் மகாபலி சக்கரவர்த்தியிடம் செய்த, அதே மாயத்தை தன்னிடமும் செய்யும்படி வைணவ ஆச்சாரியாரான ஆளவந்தார் வேண்டுகிறார்.

"சங்கு, சக்கர, அங்குச ரேகைகள் கொண்ட உன் திருவடியை, என் தலை மீது வைக்கும் பேறு எப்போது கிடைக்கும்?'' என்று அவர் கேட்கிறார். திருமாலின் திருவடிகள் அந்தளவுக்கு உயர்ந்தவை. எனவே, பெருமாள் கோவில்களுக்கு செல்பவர்கள் முதலில் அவரது திருவடியைத் தரிசிக்க வேண்டும். பிறகே முகம் பார்க்க வேண்டும். திருமாலின் திருவடி பொறித்த சடாரியை நம் தலையில் வைப்பதும் இதனால் தான். தன் திருவடிகளில் சரணடைந்த அடியவர்களின் பாவங்களை போக்கி நல்வாழ்வு தந்தருள்வார்

No comments:

Post a Comment