Thursday 18 January 2018

நாலு வழியும் நல்ல வழி தான்


முருகப்பெருமானை அன்பால் பூஜித்தல், ஆகம முறையில் பூஜித்தல், பயன் கருதி பூஜித்தல், பயன் கருதாமல் பூஜித்தல் என நான்கு வகையாக வழிபடுவர். குறவர்கள் செய்யும் வழிபாடு அன்பு வழிபாடு என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் குறவர்களின் அன்பு வழிபாடு சிறப்பாக சொல்லப்படுகிறது. மந்திரங்கள், புஷ்பங்கள் சமர்ப்பித்து அந்தணர்கள் செய்யும் பூஜை, ஆகம வழிபாடு ஆகும். இது கோவில்களில் செய்யப்படுகிறது. முடி காணிக்கை, காவடி எடுத்தல், பால்குடம் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்துவது பயன்கருதிச் செய்யும் வழிபாடாகும். சித்தர்கள் ஆன்மநெறியில் செய்யும் வழிபாடே பயன் கருதாத ஞான வழிபாடு ஆகும். இதில் எதை தேர்ந்தெடுத்து வழிபட்டாலும், கருணைக்கடலான முருகன் அருள்பாலிப்பார்.

No comments:

Post a Comment