Thursday, 18 January 2018

கருப்புன்னா என்ன! இருக்கவே இருக்குது தீர்த்தம்


பாற்கடலில் எழுந்த விஷத்தின் வேகத்தால், அங்கு நின்ற கருடன் கருப்பாகி விட்டது. தன் இயல்பான நிறம் வேண்டி சிவனை வணங்கியது. அதனிடம் சிவன், "நான் விழுங்கிய விஷம், பூலோகத்தில் ஒரு நாவல் மரத்தில் கனியாகப் பழுத்திருக்கிறது. அந்தப்பழம், சம்பூநாதவாவி என்னும் தீர்த்தத்தில் விழுந்து நச்சுத்தன்மையை நீக்கும். நீ அந்த தீர்த்தத்தில் நீராட இயல்பான நிறம் பெறுவாய்,'' என்றார். கருடனும் அப்படியே செய்தான். இத்தீர்த்தம் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவிலில் "நாவலேஸ்வரர் தீர்த்தம்' என உள்ளது. கருப்பாக இருக்கிறோமே என வருந்துவோர் இத்தீர்த்தத்தை தலையில் தெளித்து, சிவனை வழிபட கருப்பு என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

No comments:

Post a Comment