Thursday, 27 July 2017

சிவனருள் பொழியும் பெருமாள்


திருப்பாற்கடல் தலத்தில் பெருமாளின் கிடந்த, நின்ற கோலங்களை ஒரு சேர தரிசிக்கலாம். மூலவரின் சிலை, அத்திமரத்தால் செய்யப்பட்டது. 9 அடி நீளம், 3 அடி உயரம் கொண்ட ஆதிசேஷன் மேல், தலைக்கு நெல் அளக்கும் மரக்காலை அணையாக கொண்டு அனந்த சயனகோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள். பெருமாளின் திருமுடியருகே திருமகளும், திருவடி அருகே பூதேவியும் வீற்றிருக்கின்றனர். நாபிக் கமலத்திலிருந்து தோன்றும் தாமரை மீது பிரம்மா அமர்ந்திருக்கிறார்.

புண்டரீக மகரிஷி பெருமாளை தரிசனம் செய்ய, இக்கோயிலுக்கு வந்தார். ஆனால் அங்கு தூசேஸ்வரர் என்ற ஈசனின் வடிவைக் கண்டார். பெருமாள் ஆலயத்தில் சிவனா என்று வியந்து, குழம்பினார். உடனே திருமால் அவர்முன் தோன்றி லிங்கத்தின் மேல் நின்றகோலத்தில் காட்சியளித்தார்! சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தில் இருந்து தெற்காக பிரியும் சாலையில் 3 கி.மீ தூரம் சென்று திருப்பாற்கடலை அடையலாம்.

No comments:

Post a Comment