Wednesday 26 July 2017

பைரவருக்கும் வடை மாலை சமர்ப்பிக்கலாமா?


பைரவர் க்கான பட முடிவு

புஷ்பம், முத்து, தங்கம், வைரம், பவளம், துளசி, ருத்ராட்சம் ஆகியவற்றைக்கொண்டு இறையுருவங்களுக்கு மாலையாக அணிவிப்பதுண்டு. மாலை என்ற சொல் புஷ்ப மாலை, முத்து மாலை போன்றவற்றைக் குறிக்கும்.

தலைவர்களது வரவேற்பிலும் புஷ்பம் பயன்படுத்துவர். இறையுருவ உபசாரங்களில் புஷ்ப மாலைக்கு இடமுண்டு. பொன் வைக்க வேண்டிய இடத்தில் புஷ்பத்தை வைப்பர். ஸ்வர்ண புஷ்ப உபசாரத்தில், தங்கத்துக்கு மாற்றாக புஷ்பத்தைப் பயன்படுத்துவோம். 

இறையுருவங்களின் பணிவிடைகளில், மற்ற மாலைகளை அணிவித்தாலும் புஷ்ப மாலையைத் தவிர்க்க இயலாது. காலப்போக்கில் நடைமுறையை மீறி பலவித மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. வடை, வெற்றிலை, பழம், தேங்காய், கொண்டைக் கடலை, அறுகம் புல் மற்றும் ரூபாய் நோட்டு ஆகியவற்றால் ஆன மாலைகளும் கடவுள் சிலைகளுக்கு அணிவிக்கப் படுகின்றன. 

புதிய நடைமுறையை ஊர்ஜிதம் செய்ய தல புராணம், பக்தனது செயல்பாடு ஆகியவற்றை எடுத்துக் கூறி ஊக்குவிப்பர்.

ஆஞ்சநேயருக்கு மட்டுமின்றி எந்தக் கடவுளர்களுக்கும் வடை மாலையை சாத்தலாம். பக்தனின் விருப்பப்படி உபசாரங்கள் மாறும்போது பாகுபாடு இடையூறாக இருக்காது.

நம் முன்னோர்கள் பக்தியை வெளிப் படுத்தினார்கள். அமைதி, பண்பு, நாகரிகம் மற்றும் வரையறையோடு செயல்பட்டனர். இந்த நடைமுறையை நாமும் பின்பற்றலாம்.

ஆனால், இன்றைய சூழலில் புதிது புதிதாக மாலைகளை உருவாக்கி, அவற்றுக்கு முதலிடம் அளித்து செயல்படுவதால், பக்தர்களும் இதை வரவேற்கின்றனர். அளவுகோல் என்பது பக்தர்களின் விருப்பத்துக்குத் தக்கபடி மாறி வருகிறது. புதுப்புது சிந்தனைகளை இறையுருவங்களில் புகுத்தாமல், இத்துடன் நிறுத்திக்கொள்வதே அழகு

No comments:

Post a Comment