Sunday 23 July 2017

செண்டால் அடித்தாலும் வலிக்குது


முருகப்பெருமானின் அம்சம் பெற்ற பாண்டிய மன்னர் உக்கிரகுமாரர் மதுரையை ஆண்டு வந்தார். அப்போது பஞ்சம் நிலவியது. வருந்திய உக்கிரகுமாரர் சிவபூஜை செய்து விட்டு நித்திரையில் ஆழ்ந்தார். 

கனவில் தோன்றிய சிவன், “பஞ்சம் குறித்து வருந்த வேண்டாம். தான் என்னும் ஆணவத்துடன் இருக்கும் வடக்கிலுள்ள மேரு என்ற மலைக்குச் செல். அதைப் பணியச் செய். அங்கு குவிந்து கிடக்கும் பொன்னை எடுத்து வந்து மக்களைக் காப்பாற்று, ” என்றார். உக்கிரகுமாரரும் அங்கு புறப்பட்டார். 

மேரு மலையிடம், “மலைகளில் சிறந்த மேருவே! ” என்று பல முறை அழைத்தார். ஆனால், அந்த மலை உக்கிரகுமாரரை மதிக்கவே இல்லை. தானே உயர்ந்தவன் என்று கர்வத்துடன் நின்றது. கோபம்அடைந்த உக்கிரகுமாரர் தன் கையில் இருந்த பூச்செண்டால் அதன் உச்சியில் ஓங்கியடித்தார். பலமிக்க அந்த மலைக்கு செண்டின் அடியைக் கூட தாங்க முடியவில்லை. 

பதறிப் போன மேருமலை, உக்கிரகுமாரரை வணங்கியது. 

“என் நாட்டு மக்களைக் காக்க பொன்னும், பொருளும் வேண்டும். அதற்கான நிதி எங்கிருக்கிறது?” என்று கேட்டார் உக்கிரகுமாரர். அருகில் இருந்த குகையை மேருமலை காட்டியது. அதில் தேவையான பொன், பொருளை எடுத்துக் கொண்டு உக்கிரகுமாரர் மதுரை வந்து சேர்ந்தார். மக்களுக்கு பங்கிட்டு வழங்கினார்.

No comments:

Post a Comment