Friday, 28 July 2017

விறகு தந்த முக்தி


பெத்தான் சாம்பான் என்பவன் சிறுவயதில் இருந்தே நடராஜர் மீது பக்தி கொண்டிருந்தான். கல்வியறிவு இல்லாத அவன், சிதம்பரம் நடராஜர் கோவில் மடப்பள்ளிக்குத் தேவையான விறகு கொடுக்கும் பணியைத் தவறாது செய்து வந்தான். 

மழை காலம் ஆரம்பித்ததால் அடைமழை பெய்தது. சாம்பானால் காட்டிற்குச் சென்று விறகு வெட்ட முடியவில்லை. 

""அப்பனே! நடராஜா! உனக்கு சேவை செய்ய முடியாத பாவியாகி விட்டேனே...'' என்று அழுதான். நடராஜப் பெருமான் அவன் முன் தோன்றி, ""கவலை வேண்டாம்' என்று ஆறுதல் சொன்னதோடு, "அடியாருக்கு எளியன்' என்று தொடங்கும் பாடல் எழுதிய ஓலைச்சுவடியை கொடுத்தார்.

""இப்போதே இந்த ஓலைச்சுவடியை, இவ்வூரிலுள்ள உமாபதி சிவாச்சாரியாரிடம் கொண்டு போய் சேர்'' என்று சொல்லி மறைந்தார்.

அதன்படியே அவன் செய்ய, பெத்தான் சாம்பனுக்கு நடராஜர் தரிசனம் அளித்ததை அறிந்த சிவாச்சாரியார் மகிழ்ந்தார். அவனுக்கு தீட்சை அளித்து முக்தி பெற காரணமாக அமைந்தார்.

No comments:

Post a Comment