வள்ளலாரின் இளமைக்கால பெயர் ராமலிங்கம். சரியாக படிக்காததால், அவர் மீது அவரது அண்ணன் சபாபதி கோபமாக இருந்தார். அதனால் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம், தம்பிக்கு சாப்பாடு போட வேண்டாம் என்று சொல்லியிருந்தார்.
அன்று இரவு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்குச் சென்ற ராமலிங்கம், இரவு வீட்டுக்கு வர நீண்ட நேரமானது. வீட்டுக்கு வந்த போது கதவு தாழிட்டிருந்தது.
வெளியிலுள்ள திண்ணையில் ராமலிங்கம் படுத்துக் கொண்டார். பசியாக இருந்ததால் தூக்கம் வரவில்லை. அப்போது ராமலிங்கத்தின் சகோதரி உண்ணாமுலை வந்தார்.
ராமலிங்கத்திற்கு சாப்பாடு கொடுத்தார். அதன்பின்பே ராமலிங்கம் நிம்மதியாக தூங்கினார்.
அசந்து தூங்கி விட்ட பாப்பாத்தியம்மாள் நள்ளிரவில் கண் விழித்தார். அவருக்கு ராமலிங்கத்தின் நினைவு வந்தது.
திண்ணையில் ராமலிங்கம் படுத்திருப்பார் என யூகித்து, நாத்தனார் உண்ணாமுலையை அனுப்பி அவரை எழுப்பி வரச்சொன்னார். உண்ணாமுலையும் தம்பியை எழுப்பினார். எழுந்த ராமலிங்கம், "அக்கா! கோவிலில் இருந்து வந்ததும் நீ தானே எனக்கு சாப்பாடு தந்தாய். திரும்பவும் சாப்பிட வரச் சொல்கிறாயே! அதோ! நான் சாப்பிட்ட இலை கூட அங்கு கிடப்பதைப் பார்,'' என்றார்.
உண்ணாமுலைக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், திருவொற்றியூர் வடிவுடையம்மனே தனது வடிவில் வந்து தம்பியின் பசி தீர்த்ததை புரிந்து கொண்டார். ராமலிங்கத்திற்கும் உண்மை தெரிய வந்தது
No comments:
Post a Comment