Saturday 29 July 2017

நினைத்தாலே குரங்கு


கங்கை நதி பாயும் வடதேசத்தை பிரதத்தமாராஜன் ஆட்சி செய்தான். சோழநாட்டிற்கு படையெடுத்து வந்த மன்னன், திருவண்ணாமலை வந்தான். அண்ணாமலையாரின் மகிமையைக் கேள்விப்பட்டு தரிசனத்திற்காக கோவிலுக்கு சென்றான். அப்போது அண்ணாமலையாக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. 

ஒரு தாசி பாடிக் கொண்டிருந்தாள். அவளது குரலின் இனிமையும், அழகும் கண்ட மன்னன் அவளை அடைய ஆசைப்பட்டான். 

அண்ணாமலையாரைத் தவிர வேறு யாரையும் கனவிலும் எண்ணாத அவளுக்கு, மன்னனுடன் செல்ல விருப்பமில்லை. சிவனின் திருவடியே கதி என சரணடைந்த அந்த கணமே, மன்னனின் முகம் குரங்கு வடிவமாக மாறியது. 

திகைத்துப் போன பிரதத்த மாராஜன். அங்கிருந்தவர்கள் அவனிடம், ""மன்னா! அண்ணாமலையார் மீது பக்தி கொண்ட இவளைக் கவர்ந்து செல்ல விரும்பியதற்கு தண்டனையாக குரங்கு முகம் வந்து விட்டது. பரிகாரம் தேடிக் கொள்வது நல்லது,'' என்றனர்.

சம்மதித்த மன்னனும் தன்னிடம் இருந்த யானை, குதிரை, தேர் என அனைத்தையும் அண்ணாமலையாருக்கு காணிக்கையாக அளித்தான். அதன்பின், குரங்கு முகம் நீங்கி மனித முகம் உண்டானது. தன் பக்தர்களுக்கு தீங்கு செய்ய எண்ணினால், உடனே தண்டனை தருவார் அண்ணாமலையார்.

No comments:

Post a Comment