Wednesday, 26 July 2017

பிரம்ம காயத்ரி


மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, படைப்புக் கடவுளாக போற்றப்படுகிறார். நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் இவருக்கு உண்டு. விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றியவர் பிரம்மன். இவரது மனைவி கல்விக் கடவுளான சரஸ்வதி. பிரம்மனின் சகோதரியாக மகாலட்சுமியைச் சொல்வார்கள். பிரம்மதேவருக்கு சனகர், சனத்குமாரர், சனத்சுஜாதர், சனந்தனர், வசிஷ்டர், புலகர், புலஸ்தியர், பிருகு, தட்சிப்பிரஜாபதி, ஆங்கிரஸ், மரீசி, அத்ரி, நாரதர் ஆகிய மகன்கள் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. பிரம்மதேவனை வழிபடும்போது, அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்வது நன்மைகளைத் தரும்.

‘ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ்
ப்ரசோதயாத்’

‘‘வேதங்களை உருவாக்கியவரை நாம் அறிந்து கொள்வோம். ஹிரண்யன் என்னும் பெயர் பெற்ற அந்தப் பரம்பொருளை தியானம் செய்வோம். பிரம்மதேவனாகிய அவர், நமக்கு நன்மை அளித்து, காத்து அருள்வார்,’’ என்பது இதன் பொருள். இந்த காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கிடைக்கும். வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

No comments:

Post a Comment