Sunday 23 July 2017

ஏழுமலையானுக்கு சிபாரிசு கடிதம்


திருப்பதி சென்ற ராமானுஜர் ஒருமுறை தன் சீடர்களுடன் கடும் வெயிலில் நின்றார். அங்கு 'கொண்டி' என்னும் பெயருள்ள மோர் விற்பவள் வந்தாள். 

அவளிடம், “அம்மா...மோர் என்ன விலை?” என்று கேட்டனர். 

பதிலேதும் சொல்லாமல், ஆளுக்கு ஒரு குவளை மோர் கொடுத்தாள். 

குடித்து முடித்ததும் ராமானுஜர், “அம்மா...! பணம் எவ்வளவு வேண்டும்?” என்றார்.

அவளோ, “சுவாமி! பணம் வேண்டாம். மோட்சம் தந்தருள வேண்டும்,” என்றாள்.

“மோட்சம் அருள்பவர் மலை மீதல்லவா இருக்கிறார். அவரிடம் கேட்டால் தான் கிடைக்கும்,” என்றார் ராமானுஜர்.

“அவர் ஏதும் பேச மாட்டாரே....! நீங்கள் வேண்டுமானால் எனக்கு மோட்சம் தரும்படி சீட்டு எழுதிக் கொடுங்கள். அவரிடம் சமர்ப்பிக்கிறேன்,” என்றாள் கொண்டி. 

ராமானுஜரும் பெருமாளுக்கு சீட்டொன்று எழுதி தந்தார். அவள் கோவிலுக்கு சென்று, அர்ச்சகரிடம் சீட்டை ஒப்படைத்தாள். அப்போது பெருமாளே வாய் திறந்து, “உனக்கு மோட்சம் கொடுத்தேன்,” என்றதுடன் சீட்டையும் கைநீட்டி வாங்கினார். விஷ்ணு தூதர்கள் அவளை பரமபதம் அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment