தினமும் காலையில் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்த ஒருவன், ''கடவுளே, என் வாழ்வின் இறுதிவரை நீ என்னுடன் இருக்க வேண்டும்,'' என பிரார்த்திப்பான். சில நாட்களுக்குப் பின், தனது பிரார்த்தனை கடவுளைச் சென்றடைந்திருக்குமா? என்ற சந்தேகித்தான்.
ஒருநாள் அவனது கனவில் தோன்றிய கடவுள், தினமும் நீ நடக்கும்பொழுது உன் காலடித்தடம் அருகில் எனது காலடித்தடமும் தெரியும். அதைக்கொண்டு நான் உன்னுடன் இருப்பதை புரிந்து கொள்,'' என்றார். அடுத்த நாளில் இருந்து அதே போல் நிகழ்ந்தது. ஒருமுறை அவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. சொந்தங்கள், நண்பர்கள் பிரிந்து விட்டனர். ஆயினும் கலங்காமல் தொழிலை நடத்தினான். ஒருநாள் அவனது காலடித்தடங்கள் மட்டுமே மண்ணில் பதிந்திருந்தன. இதுகண்டு வருந்திய அவன் ''கடவுளே! என் சொந்தபந்தங்கள் தான் பிரிந்தனர் என்றால், நீயுமா பிரிந்துவிட்டாய்? எனக் கதறினான். அவனது கனவில் தோன்றிய கடவுள், 'நீ இன்று பார்த்தது என் கால் தடத்தை தான். நஷ்டத்திலும் கலங்காமல் தொழிலைத் தொடர்வதைப் பார்த்து, உன்னைத் தோளில் சுமந்து கொண்டு நடந்தேன்,'' என்றார்.
நம்பியவருடன் கடவுள் உடன் வருவார். அவருக்கு துன்பம் வந்தால் தோளிலேயே சுமப்பார்
No comments:
Post a Comment