கேரளா அருகே மல்லியூரில் உள்ள மகா கணபதி ஆலயத்தில், மூலவர் மகா கணபதியின் மடியில் குழந்தை வடிவில் கிருஷ்ணர் அமர்ந்து இருக்கிறார்.
பொதுவாக அனைத்து திருத்தலங்களிலும் முதன்மையாக கருதப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான். அவர் தனி சன்னிதியில் காணப்படுவார், இல்லையெனில் கருவறையில் வீற்றிருப்பார். தென்னிந்தியாவில் தனிக்கடவுளாக காட்சி தருகிறார். வட இந்தியாவில் சித்தி, புத்தி தேவியரோடு காட்சியளிக்கிறார்.
சிவாலயங்களில் கன்னிமூலை கணபதியாகவும், விஷ்ணு ஆலயங்களில் தும்பிக்கை ஆழ்வாராகவும் காட்சி தருகிறார். ஆனால் கேரளாவில் கோட்டயம்-எர்ணாகுளம் செல்லும் சாலையில் குருப்பந்தரா அருகே மல்லியூரில் உள்ள மகா கணபதி ஆலயத்தில், மூலவர் மகா கணபதியின் மடியில் குழந்தை வடிவில் கிருஷ்ணர் அமர்ந்து இருக்கிறார். இதனால் இவரை ‘வைணவ கணபதி’ என்று அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment