Monday 10 July 2017

கிளியின் பெருமை

meenakshi amman க்கான பட முடிவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தன் இடக்கையில் கிளி வைத்திருக்கிறாள். அந்தக்கிளி எவற்றால் செய்யப்பட்டது தெரியுமா?
நாகமல்லிகை இலை, நந்தியாவட்டை இலை, ஏழிலைக் கிழங்கு இலை, வெள்ளரளி, செவ்வரளி போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது ஆண்டாளின் கிளி.
ஒவ்வொரு நாளும் ஆண்டாளின் கிளியைப் பெற கோயிலில் முன்னதாகச் சொல்லிவைத்து பக்தர்கள் அதை வாங்கிச் செல்கின்றனர். இக் கிளியை பூஜையறையில் வைத்தக் கொண்டால் நன்மைகள் பெருகுவதாக நம்பிக்கை. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை ஆண்டாளிடம் கூறும்போது அதைக் கேட்கும் கிளி, திரும்பத் திரும்ப அவரிடம் நினைவுறுத்துவதாக ஐதிகம். வியாசரின் மகனாகிய சுகப்பிரம்ம மகரிஷியே ஆண்டாளின் கையில் கிளியாக அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மனின் வலது கையிலும் கிளி இடம் பெற்றிருக்கிறது. ஆர்வாச மகரிஷி கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற இந்திரன் பூலோகம் வந்தபோது இத்தலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் கிளிகள் வட்டமிட்டபடி "ஓம் நமசிவாய' என்று சொல்லி பறந்து கொண்டிருந்தனவாம். இந்திரன் ஆச்சரியமுற்று கீழே நோக்க, அங்கே சுயம்பு லிங்கமாக சொக்கநாதர் எழுந்தருளியிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியுற்று, அவரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு. சொக்கநாதப் பெருமானை அடையாளம் காட்டிக் கொடுத்ததன் அடிப்படையில் மதுரையிலம் கிளி முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment