Friday 21 July 2017

நன்மை தரும் நாகேஸ்வரம்

நன்மை தரும் நாகேஸ்வரம்

ராகுபகவானிற்கு உரிய சிறப்பு ஸ்தலம் திருநாகேஸ்வரம். இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் (கும்பகோணம்– காரைக்கால் சாலையில்) உள்ளது.

கால சர்ப்பதோ‌ஷம், ராகுதிசை, ராகுபுத்தி, நாக தோ‌ஷம் போன்றவற்றிற்கு உட்பட்டவர்கள் இங்குள்ள ராகு பகவானைத் துதித்து அந்த தோ‌ஷங்களில் இருந்து விடுபடலாம். ஐந்து தலை அரவமாகிய (நாக ராஜாவாக) ராகுபகவான் சன்னிதி, கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ளது. உதட்டோர புன்னகை, மடித்த காலில் இடது கரத்தை ஊன்றி வலக்கரத்தால் அருள் பாலிக்கிறார்.

இங்கு வீற்றிருக்கும் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் பால், அவருடைய திரு

மேனியில் பட்டு வழியும் போது நீலநிறமாக மாறிவிடும் அதிசயம் இன்றுவரை நடந்து வருகிறது.

1980–ம் ஆண்டு ராகு பகவானின் மீது கிடந்த நாகப் பாம்பின் சட்டை, கோவிலில் கண்ணாடி பேழை ஒன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ராகு –கேதுகளுக்குரிய காயத்ரி

ராகு காயத்ரி:
நாக த்வஜாய வித்மஹே!
பத்ம ஹஸ்தாய தீமஹி!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!

கேது காயத்ரி:
அச்வ த்வஜாய வித்மஹே!
சூல ஹஸ்தாய தீமஹி!
தந்நோ கேது ப்ரசோதயாத்!

கேதுவைப் பற்றிய ரகசியங்கள்

பாம்புத் தலையும், மனித உடலையும் கொண்டவர் கேது பகவான்.

உகந்த கிழமை     –    சனிக்கிழமை

உகந்த நட்சத்திரம்     – அசுவதி, மகம், மூலம்

நட்பு கிரகம்     – புதன், சுக்ரன், சனி

பிடித்த மலர்     – செவ்வரளி

விரும்பும் சமித்து     – தர்ப்பை

விரும்பும் தானியம்     – கொள்ளு

உரிய ரத்னம்     – வைடூர்யம்

அதிதேவதை     – விநாயகர், சரஸ்வதி,       பிரம்மா, சித்ரகுப்தர்

உச்ச வீடு     – விருச்சிகம்

நீச்ச வீடு     – ரி‌ஷபம்

காரக அம்சம்     – ஞானகாரகன்

பிடித்த உலோகம்     – துருக்கல்

விரும்பும் வாகனம்     – சிம்மம்

மனைவியின் பெயர்     – சித்திரலேகா

பிடித்த சுவை     – புளிப்பு

காலம்     – எமகண்டம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட கேது, ராகுவுக்கு 7–ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும்.

No comments:

Post a Comment