Saturday 22 July 2017

சாய் சரித்திர வேதம், கடவுளின் அவதாரமான பாபா


சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாயியின் விஸ்வரூபமே அன்றி வேறல்ல... சாய் சத்சரித்திரத்தில் இருந்து சில துளிகள்...

* பாபா எங்கும் உள்ளார். அவர் எந்த எல்லைக்கும் உட்பட்டவர் அல்ல. பாபா ஷீரடியில் மட்டுமே இருக்கிறார் என்பவர், உண்மையில் பாபாவை காணத் தவறியவரே.

* எப்பொழுதும் உணவு உண்ணும் முன் பாபாவுக்கு நிவேதனம் செய்யுங்கள், இது போன்ற பக்தர்களிடம் எப்பொழும் கூடவே இருப்பதாக கூறியுள்ளார். விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அங்கிகரிக்கவில்லை.

*பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் படமும் எப்போதும்  வாழ்கின்ற தெய்வீக அவதாரமான பாபாவே. இதில் சந்தேகமே வேண்டாம்.

* நாய், பூனை, நோய்வாய்ப்பட்ட மனிதன் என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே. பசியாய் இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர் உண்மையில் அதை பாபாவின் வாயிலேயே இடுவதாக கூறியுள்ளார்.

* ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நம்பாமல், தன்னை மட்டுமே நம்பும்படி பாபா கூறியுள்ளார். ஏனென்றால், தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களின் காரியங்களை தானே நடத்துவதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment