Thursday 6 July 2017

ராமர் லிங்கத்தை என்று பிரதிஷ்டை செய்தார் ?


ராமேஸ்வரம் கடற்கரையில் லிங்கம் பிரதிஷ்டை செய்து தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார் ராமர். இந்த சிவலிங்கத்தை  ராமர் எப்பொழுது பிரதிஷ்டை செய்தார்? ஜ்யேஷ்ட மாதம் சுக்லபட்சம் தசமி திதி, புதன் கிழமை, ஹஸ்த நட்சத்திரம், கரானந்தம், வ்யதீபாதம். கன்யா ராசியில் சந்திரன், ரிஷபத்தில் சூரியன் - இந்த நன்னாளில் பரமேஸ்வரரான சிவபெருமானை ராமர் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்கிறது  ஸ்காந்தபுராணம். ஜ்யேஷ்டம் என்பது வைகாசி (மே-ஜூன்) பெளர்ணமியில் தொடங்கும் சாந்த்ரமான மாதமாகும். அன்றைய நட்சத்திரம் கேட்டை (ஜ்யேஷ்ட). சுக்லபட்ச தசமியில் ஹஸ்த நட்சத்திரம் சேர்ந்து வருவது தசஹரா புண்ணிய காலம். ‘இந்த காலத்தில்தான் ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தாராம்.

No comments:

Post a Comment