ஒரு கிராமத்துக் கோவிலின் சன்னதி வாசலில் நின்ற துவார பாலகியர் அம்மனிடம், “தாயே... இந்த ஊரில் தங்களுக்கு பிடித்த பக்தர் யார்? ” எனக் கேட்டனர்.
''ஊருக்குள் போய் மக்களிடம் பேசிப் பாருங்கள். உண்மை புரியும்,” என்றாள் அம்மன்.
இருவரும் சாதாரண பெண்கள் போல ஊருக்குள் சென்றனர்.
ஒரு விவசாயிடம் பேசும் போது, “நான் வயலுக்குப் போய் அசதியாக திரும்பினாலும், கோவிலுக்கு வராத நாளில்லை... போதாக்குறைக்கு வீட்டிலும் அம்மனுக்கு பூஜை செய்கிறேன்” என்றார்.
ஒரு தையல்காரர், “நான் வாரத்தில் ஒருநாள் விரதமிருந்து கோவிலுக்கு வருவேன்” என்றார்.
ஒரு கடைக்காரர், “நஷ்டம் வரும் நேரத்தில் அம்மனிடம் முறையிடுவேன்,” என்றார். ஒரு இளைஞன், ''வயதான தாய்க்கு பணிவிடை செய்வதால் கோவிலுக்கு வர நேரம் கிடைப்பதில்லை,'' என்றான்.
துவாரபாலகியர் அம்மனிடம் வந்து நடந்ததைச் சொல்ல, அவள் சிரித்தபடி, “பெற்றவளுக்கு சேவை செய்வதாக சொன்னானே... அவனே எனக்கு பிடித்த பக்தன்,” என்றாள்.
Vehu arumai
ReplyDelete