கனித்திரர் என்ற முனிவரின் புகழ் எங்கும் பரவியதால், அவரது சகோதரர்கள் பொறாமை கொண்டனர். முனிவர் உயிருடன் இருக்கும் வரை, தங்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதால், அவரைக் கொல்ல திட்டமிட்டனர். கொடிய யாகம் நடத்தினர். அதில் இருந்து பூதம் ஒன்று கிளம்பியது.
“யாகம் நடத்திய தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை. கட்டளை இடுங்கள்” என பூதம் அவர்களிடம் வேண்டியது.
“நீ கனித்திரரைக் கொன்று, உடனே அவரது மாமிசத்தைப் புசிக்க வேண்டும்” என கட்டளையிட்டனர்.
முனிவரின் இருப்பிடத்திற்குச் சென்றது பூதம். தியானத்தில் ஆழ்ந்திருந்த அவரது முகத்தில் அன்பு பிரகாசித்தது. அந்த நல்லவரைக் கொல்ல மனம் இல்லாமல் பூதம் திரும்பியது.
கொடுக்கப்பட்ட வேலையை செய்யாவிட்டால், கட்டளை இட்டவர்களைக் கொன்று தின்னும் இயல்பு பூதத்திற்கு உண்டு.
அதன்படி யாகசாலைக்கு வந்த பூதம், கனித்திர முனிவரின் சகோதரர்களைக் கொன்று தின்றது. இறுதியில் வேள்வித்தீயில் குதித்து மறைந்தது. வினை விதைத்தவர்கள் வினை அறுத்தார்கள்.
No comments:
Post a Comment