Thursday 20 July 2017

சந்திரன் சுழற்சி ரகசியம்

சந்திர பகவான் க்கான பட முடிவு

பூமி என்னும் நாம் வாழும் கோள், சூரியனை சுற்றி வருகிறது. சூரியன் தன்னை தானே சுற்றிக்கொண்டு இருக்கிறது. தன்னை தானே சுற்றி கொண்டிருக்கும் பொருளின் மீது காந்தம் உருவாகும் என்ற அறிவியல் விதிப்படி. சூரிய காந்த புலம் உருவாக்கி, ஈர்ப்பு சக்தியை வெளிவிட்டு, மற்ற கிரகங்களை தன் கட்டுபாட்டில் வைத்திருகிறது.

அது போல பூமியும் சுற்றி வருகிறது. சந்திரன் பூமியில் இருந்தே உருவானது என்பது அறிவியல் கூறும் முன் நம் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் புராண கதைகளில் கூறி இருக்கிறது. அந்த புராணக் கதையை சுருக்கமாக பார்ப்போம்.

நமது புராண கதைகளில் அமிர்தம் கடைய பாற்கடலை கடைந்தனர் தேவர்களும் அசுரர்களும், இதில் பாற்கடல் என்பது பால்வெளி என்று வரையறுத்தனர். பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளியானது ஒரு பகுதியில் மட்டுமே படும். மீதி பகுதி இருளாக இருக்கும். இதனை காரணமாகவே பகல் மற்றும் இரவு நேரங்கள் கண்டங்களுக்கு கண்டம். மாறுபடுகிறது. பூமியின் ஒளி படும் இடம் (பகல் நேரம்) தேவர்கள் என்றும், சூரிய ஒளி படாதபக்கம் (இரவு நேரம்) அசுரர்கள் என்றும் நிர்ணயம் செய்தனர். மேரு என்ற புனித மலையை நிலை நிறுத்தி அமிர்தம் கடையபட்டது. பூமியின் சுழற்சியில் இரவு பகல் மாறி மாறி வரும் என்பதை மேரு மலையைக் கடைதல் என்று உருவகப்படுத்தினர். இந்த புராணக் கதையில் சந்திரன் பால்வெளியில் வெளிப்பட்டான் என்கிறது புராணம்.

தற்கால அறிவியல் பால்வெளியில் பூமியின் அதிவேக சுழற்சியால், பூமியின் ஒரு பகுதி நிலவாக மாறியது என்கிறது. இப்பொழுதும் பூமியின் ஈர்ப்பு விசையலேயே சந்திரன் பூமியை சுற்றிவருகிறது.

முன்னோர்களின் கணக்கின்படி நிலவு 27.32 நாட்கள் பூமியை வலம் வர எடுத்துகொள்கிறது. அதுவே 27 நட்சத்திர பெண்களுடன் சந்திரன் இருக்கிறான் என்கிறது ஜோதிடம். அந்த 27 மனைவிகளில் சந்திரனுக்கு மிகவும் பிடித்த மனைவி என்று ரோஹிணி என்று கூறுகிறது. வான மண்டலத்தில் ரோஹிணி என்ற நட்சத்திரம் ரிஷப ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திர கூட்டமாகும். மற்ற நட்சத்திரங்களை சாதாரணமாக கடந்து செல்லும் சந்திரன். ரோஹிணி நட்சத்திர கூட்டத்தில் மட்டுமே உள்நுழைந்து செல்கிறது. அதுவும் கலையின் கொம்பு போன்ற ரோஹிணி நட்சத்திர கூட்டத்தின் இடையே கடந்து செல்கிறது. இது போல முன்னோர்கள் சந்திரன் சுழற்சியை வைத்தே பூமி சுழலும் விதத்தை கணக்கிட்டனர்.

மேலைநாடுகளில் சூரியனை மையமாக வைத்தே ஜோதிடம் பார்க்கப்படுகிறது. இதை தான் SUN SIGN என்று மேலை நாட்டினர் கூறுகின்றனர். ஆனால் சந்திரன் பூமியின் ஈர்ப்பு விசையில் சுற்றுகிறது என்பதை அறிந்து சந்திரனை (MOON SIGN) வைத்தே இங்கு ஜோதிட பலன்கள் கூறப்படுகிறது. அது போல குழந்தை ஜனனம் செய்யும் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திர கூட்டத்திற்குள் சென்று கொண்டு இருக்கிறாரோ அதுவே ஜென்ம நட்சத்திரம் என்று வரையறுத்தனர்.

No comments:

Post a Comment