Thursday 20 July 2017

இழந்ததைத் தரும் தீர்த்தம்


பத்ரமதி என்ற அந்தணர் சில காரணங்களால் வறுமைக்கு ஆளானார். குடும்பத்தைக் காப்பாற்ற வழியில்லாமல், சுகோஷன் என்ற செல்வந்தரின் உதவியை நாடினார். அவரும் பத்ரமதிக்கு ஒரு நிலத்தை தானமாகக் கொடுத்தார்.

இந்நிலையில், பத்ரமதியின் மனைவி, தன் கணவரிடம், “திருப்பதி வேங்கடமலையிலுள்ள பாபவிநாசம், ஆகாசகங்கை தீர்த்தம் ஆகியவற்றில் புரட்டாசி மாதத்தில் ஏதாவது ஒருநாள் நீராடி, நில தானம் அளித்தால் ஏழேழு ஜென்ம பாவம் நீங்கி செல்வ வளம் பெருகும்,” என்று தான் கேள்விப்பட்ட தகவலைச் சொன்னாள். 

பத்ரமதியும், தனக்கு தானமாகக் கிடைத்த இருந்த சொற்ப நிலத்தையும் பெருமாளுக்கு தானம் அளிக்க திருப்பதிக்கு புறப்பட்டார். 

ஏழுமலையான் அவர் முன் தோன்றி, “ என் மீது கொண்ட பக்தியால், உன் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் சிறு நிலத்தையும் காணிக்கையளிக்க விரும்பினாய். இனி நீ செல்வச் செழிப்புடன் வாழ்வாய்” என்று அருள்புரிந்தார். இது கண்டு பத்ரமதி மகிழ்ந்தார். பெருமாள் சொன்னது போலவே இழந்த செல்வத்தை அடைந்தார். 

No comments:

Post a Comment